search icon
என் மலர்tooltip icon
    • தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி - அதானியை வசைபாடுவதை ராகுல்காந்தி நிறுத்திவிட்டார் என மோடி பேசியிருந்தார்.
    • "மோடி தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறாரா?" என ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

    அண்மையில் பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்தார். கரீம்நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது "காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.

    பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.

    காங்கிரஸ் கட்சிக்கு டெம்போ லோடு பணம் வந்து சேர்ந்ததா?. ஒரே இரவில் அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்" என்று பிரதமர் மோடி பேசினார்.

    அந்த சமயத்தில், "மோடி தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறாரா?" என ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ராகுல்காந்தி மீண்டும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இன்று நான் லக்னோ விமான நிலையத்தில் இருக்கிறேன். லக்னோ, மும்பை, அகமதாபாத், மங்களூரு, கவுகாத்தி, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் வரை அனைத்து விமான நிலையங்களையும் 50 ஆண்டுகளுக்கு பிரதமர் தனது 'டெம்போ நண்பர் அதானியிடம் ஒப்படைத்துள்ளார். இதற்கு எத்தனை டெம்போவில் காசு வாங்கினீர்கள் என்பதை நரேந்திர மோடி பொதுமக்களிடம் சொல்வாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதானியும் அம்பானியும் காங்கிரஸ் கட்சிக்கு கறுப்புப் பணம் தருகிறார்கள் என்று 5 நாட்களுக்கு முன்பு தானே மோடி கூறினார். எப்போது சிபிஐ, அமலாக்கத்துறையை அனுப்ப போகிறீர்கள். சீக்கிரமாக விசாரணையை ஆரம்பியுங்கள்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மேலும் விமான நிலையத்தில் இருந்த அதானி நிறுவனத்தின் விளம்பரங்களையும் சுட்டிக் காட்டி அவர் விமர்சனம் செய்துள்ளார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • 10 ஆண்டுகளில் காசிக்கு (வாரணாசி) உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சியை மோடி கொண்டு வந்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பெருமைக்கான பயணம் தடையின்றி தொடரும் என்றும் வாரணாசி மக்கள் அவருக்கு மீண்டும் ஒரு சாதனை வித்தியாசத்தில் வெற்றிப்பெற ஆசீர்வதிப்பார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார்.

    வாரணாசி மக்களவைத் தொகுதியில் 3வது முறையாக மீண்டும் வெற்றிப்பெறும் நோக்கில் பிரதமர் மோடி இன்று மனுத்தாக்கல் செய்தார்.

    அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பலர் கலந்து கொண்டனர். அமித்ஷாவும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். 

    இதுகுறித்து அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய கலாச்சாரத்தின் மையமான பாபா விஸ்வநாத்தின் நகரமான காசியில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த 'யஷஸ்வி' பிரதமர் நரேந்திரமோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    10 ஆண்டுகளில் காசிக்கு (வாரணாசி) உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சியை மோடி கொண்டு வந்துள்ளார்.

    அவர் இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் மேம்படுத்தியுள்ளார். மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பெருமைக்கான பயணம் தடையின்றி தொடர பாபா விஸ்வநாத் மற்றும் கங்கா 'மையா' ஆகியோரை நான் பிரார்த்திக்கிறேன்.

    இந்த முறையும் காசி மக்கள் மோடியை சாதனைக்குரிய வித்தியாசத்தில் வெற்றி பெற ஆசீர்வதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS - ID மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
    • பொது மாறுதல் கலந்தாய்விற்காக வரும் 17.05.2024-ந் தேதி வரை விண்ணப்பம் செய்த ஆசிரியர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு 13.05.2024 முதல் 17.05.2024 வரை ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS - ID மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    தொடக்கக்கல்வி இயக்ககம் சார்ந்த விண்ணப்பங்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்டக்கல்வி அலுவலருக்கு இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.

    பள்ளி கல்வி இயக்ககம் சார்ந்த விண்ணப்பங்கள் உயர்நிலை / மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.

    வட்டாரக்கல்வி அலுவலர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தொடக்க கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை ஏற்பளித்து தொடக்கக் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இடைநிலை மாவட்டக் கல்வி அலுவலர்களில் சமர்ப்பிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்வடும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரங்களை ஏற்பளித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் சமர்ப்பித்திட வேண்டும்.

    ஆசிரியர்களால் ஒவ்வொரு நாளும் சமர்ப்பிக்கப்படும் விண்ணங்கள் நிலுவையின்றி உடனடியாக வட்டாரக்கல்வி அலுவலர் / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்பளிக்கப்பட வேண்டும். மேற்படி அலுவலர்களால் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு முழுமையான வடிவில் பிரதி எடுத்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொது மாறுதல் கலந்தாய்விற்காக வரும் 17.05.2024-ந் தேதி வரை விண்ணப்பம் செய்த ஆசிரியர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும். எனவே எவ்வித விடுதலுமின்றி மாறுதல்கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து உரிய அலுவலர்களால் நாள்தோறும் நிலுவையில்லாமல் ஏற்பளித்திட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் மாறுதலுக்கு முன்பாக நடைபெறும். நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திர்ப்பாளர்களை சமாதானப்படுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்தனர்.
    • படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முசாபராபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்தனர்.

    ஆனாலும் பொதுமக்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், முசாபராபாத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    துணை ராணுவ வீரர்களின் வாகன கான்வாய் முசாபராபாத் சென்றடைந்த போது, ஷோரன் டா நக்கா கிராமத்திற்கு அருகே பொதுமக்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். துணை ராணுவ வீரர்கள் பொதுமக்களை கலைந்து போகுமாறு வலியுறுத்தினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இதில் பொதுமக்களில் 3 பேர் இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    • போட் ஏர்டோப்ஸ் 800 மாடல் நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
    • ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 நிமிடங்கள் பயன்படுத்தலாம்.

    போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஏர்டோப்ஸ் 800 இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயர்பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது. இதில் 10 மில்லிமீட்டர் அளவில் டைட்டானியம் டிரைவர்கள் உள்ளன.

    இந்த இயர்பட்ஸ் குவாட் மைக் ENx தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் அழைப்புகளின் போது மேம்பட்ட அனுபவத்தை கொடுக்கும். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இதில் உள்ள ASAP சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டு ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.

     


    இத்துடன் 50ms வரை லோ லேடன்சி மோட், வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி மற்றும் அடாப்டிவ் EQ மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. சார்ஜிங் செய்ய யு.எஸ்.பி. டைப் சி கனெக்டர் வழங்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் மாடலுக்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய போட் ஏர்டோப்ஸ் 800 மாடல் இன்டர்ஸ்டெல்லார் புளூ, இன்டர்ஸ்டெல்லார் வைட், இன்டர்ஸ்டெல்லார் கிரீன் மற்றும் இன்டர்ஸ்டெல்லார் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 17 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை அமேசான் வலைதளத்தில் மட்டுமே நடைபெற இருக்கிறது.

    • பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக எச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது.
    • தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி எச்.ராஜாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து, எச்.ராஜா மீது ஈரோடு டவுன் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    இதனையடுத்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த மாதம் 29-ம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

    இந்நிலையில், பெண்களுக்கு எதிராக ஆபாசமாக கருத்து தெரிவித்ததாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி எச்.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் எச்.ராஜாவின் வாதத்தை ஏற்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், அவரின் மனுவை இன்று தள்ளுபடி செய்தனர்

    • உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகன சட்டம் விதிகளின்படி குற்றம்.
    • சிஎன்ஜி/ எல்பிஜி மாற்றங்கள் செய்யப்படுவதால் வாகனங்களில் தீ பற்றுகிறது.

    சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகன சட்டம் விதிகளின்படி குற்றம் என போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செய்கையில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தகுதியில்லாத நிறுவனங்களால், அங்கீகரிக்கப்படாத சிஎன்ஜி/ எல்பிஜி மாற்றங்கள் செய்யப்படுவதால் வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகின்றன என கூறப்படுகிறது.

    • கோவையில் அண்ணாமலை வெல்வது உறுதி.
    • அண்ணாமலை ஜுரம் தி.மு.க.வை ஆட்டிப்படைத்து வருகிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க.வின் கொடுங்கோல் ஆட்சியை யாரும் எதிர்க்க துணியாத நிலையில் கடந்த 2021 ஜூலையில் தமிழக பா.ஜ.க. தலைவரானது அண்ணாமலை துணிவுடன் தக்க ஆதாரங்களுடன் எதிர்த்து வருகிறார். அது மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார் என்றதும் பெரும் படையை அனுப்பி அதிகாரம், பணம், ஆள்பலத்தை வைத்து அவரை வீழ்த்த அத்தனை அட்டூழியங்களையும் திமுக செய்தது. ஆனாலும் கோவையில் அண்ணாமலை வெல்வது உறுதி. இப்படி அண்ணாமலை ஜுரம் தி.மு.க.வை ஆட்டிப்படைத்து வருகிறது. அதனால் எப்படியாவது, ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைத்து அவரை முடக்கி விடலாம் என தி.மு.க. முக்கியப் புள்ளிகள் பகல் கனவு கண்டு வருகின்றனர்.

    புகாரின் அடிப்படையில் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கவர்னர் மாளிகை அனுமதி கொடுத்து விட்டதாக பொய்யான தகவலையும் பரப்பினர். ஆனால் இதை கவர்னர் மாளிகை மறுத்துள்ளது.

    எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் அண்ணா மலையின் மக்கள் பணிகளை முடக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்த காதல் ஜோடி பைக்கில் சாகச பயணம் செய்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • பைக்கில் பயணம் செய்த பெண் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் கே.டி.எம் பைக்கின் பெட்ரோல் டேங்க் மேல் காதலியை அமர வைத்து, கட்டியணைத்தபடி இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.

    அவ்வழியே தனது காரில் பயணம் செய்த ஜாஸ்பூர் காவல் கண்காணிப்பளார் (எஸ்.பி) ஷசி மோகன் சிங் இந்த ஜோடியை பார்த்து அதனை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் ஆபத்தான முறையில் பைக் ஒட்டிய வினய் என்பவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த காதல் ஜோடி பைக்கில் சாகச பயணம் செய்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பைக்கில் பயணம் செய்த பெண் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • லக்னோ அணி கடுமையான தோல்வியை தழுவியது.
    • இந்த சம்பவத்திற்கு பலரும் கருத்து தெரிவித்தனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்களில் பரபரப்புக்கு எப்போதும் பஞ்சம் இருந்ததே இல்லை. உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடராக ஐ.பி.எல். இருந்து வருகிறது.

    அந்த வகையில், ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதிய போட்டியில் நடைபெற்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியிடம் லக்னோ அணி கடுமையான தோல்வியை தழுவியது.

     


    தனது அணி மோசமான தோல்வியை தழுவியதை அடுத்து லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல். ராகுலை களத்தில் வைத்தே மிகவும் கடுமையாக சாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதோடு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்த நிலையில், லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது கே.எல். ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயங்கா ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பரஸ்பரம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    ×